ஆளுமைகள் தருணங்கள்
தான் சந்திக்கும் மனிதர்களின் தோற்றத்தை அங்குல அங்குலமாகப் பதிவுசெய்துகொள்ளும் ஆற்றல் ரவியின் கண்களுக்குண்டு. அவர்கள் தம் ஒவ்வொரு அசைவுக்குமான பொருளை உணருமாற்றல் அவர் நெஞ்சுக்கு உண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றின் மீதான பரந்த பார்வையும் தன் சமகாலச் சமுதாயத்தின் செல்நெறிகள் மீதான கணிப்பும் விமர்சனமும் அவர் அறிவுக்குண்டு. அவற்றைத்தாம் அவர்தம் படைப்புகள் புலப்படுத்தி வியக்கச் செய்கின்றன.
பொய்மை சூழுகிற உலகில் நம் சமகாலக் கலைஞர்களைக் குறித்துக்கூட உண்மையான பதிவுகளற்றுப் போகும் நாட்களில், வெளிவரும் ரவியின் கட்டுரைகள் படைப்பிலக்கியத்திற்குரிய அத்தனை இயல்புகளையும் கொண்ட வரலாற்று ஆவணங்களாகின்றன.
---பாரதிபுத்திரன்