/files/madhavan-kathaigal-727x1000_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆ. மாதவன் கதைகள்

(0)
aa.madhavan kathaigal
Price: 600.00

In Stock

Book Type
சிறுகதைகள்
Publisher Year
2016
Number Of Pages
640
Weight
800.00 gms

ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்...

அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேசி போல தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை.

ஆ.மாதவனின் சிறுகதைகளை வாசித்தவர் இதை உணர்வார்கள். அவற்றின் தனித்துவம் பற்றியும் செய்தேர்த்தி பற்றியும் கலை வெற்றி பற்றியும் அறிவார்கள்.

- நாஞ்சில் நாடன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.