கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயல்பாடும், போராட்டமாக மாறிவிடுகிறது விடுதலை வந்துசேருமென்ற
கனவைவிட விடுதலைக்கான அன்றாடப் போராட்டங்களே வாழ்வுக்கான அழகியலாகின்றன. வாழ்வாதாரஙளை அழித்துவிட்டு இலவசப்
பொருள்களுடன் வாழ்ந்துவிடலாமென கனவுகாணும் சமுகத்தினரின் அரசியல் அவ்வளவு தெளிவானதில்லை. ஒரு சமூகத்தின் எதிர்காலம் தனக்கான
போராட்டங்களை அடையாளம் காணுவதில்தான் அடங்கியுள்ளது.
நமது அடையாளத்திற்கான அப்போராட்டங்கள் பற்றிப் பேசுகின்றன இக்கட்டுரைகள். நம்பிக்கை இழந்த வலி நிறைந்த பேச்சு, அதேசமயம்
போராட்டங்களின் மீதான நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்கான பேச்சு.