வங்காளக் கதைகள்
சந்தையில் சந்திக்கும் முன்பின் தெரியாத இளைஞனுடன் ஓடிப்போகும் ஆய்னா என்பவளின் கதை....
ரயில் பெட்டியில் தாகமெடுத்து மயங்கிக் கிடப்பவளுக்கு இளம்பெண்ணொருவள் பாலூட்டும் கதை....
உடம்பின் இடது பாகம் பேரழகும் வலது பாகம் நெருப்பால் பொசுங்கி அவலட்சணமும் கொண்ட சந்தர் டாக்ரூன் என்ற பெண்ணின் கதை...
நண்பனின் மணப்பெண்ணை மணக்க நேர்ந்த இளைஞனின் கதை.... என பலவகைப்பட்ட வினோதமான கதைமாந்தர்கள்.
மேற்கு வங்கத்தின் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்கள் பின்னணியாகி அமைய சொல்லப்படும் கதைகள். இந்தக் கதை வழியே அந்நிலத்தின் திருவிழாக்கள், படகுப் பயணங்கள், அம்மக்களது பண்பாடு இவையெல்லாம் துலங்குகின்றன.
கலை தேர்ந்த சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கரங்கள் வாயிலாகக் கிடைத்த செறிவான கதைகள்.