தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைசிறந்த இருபெரும் படைப்பாளிகளின் படைப்பிலக்கியங்களில் அலசல் பார்வை கொண்ட நூல் இது.இந்நூலாசிரியர் பேராசிரியர் கி.நடராஜன் ஒப்பாய்வுத் துறையில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.அவரது சீரிய ஒப்பாய்வுப் பார்வையில் முகிழ்த்த நூல்கள் கம்பரும் ஷேக்ஸ்பியரும்,பாரதியும் ஆங்கிலக் கவிஞர்களும் ஆகும்.
நாற்பதுக்கும் மேலான நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள பேராசிரியர் கி.நடராஜன்,ஒரு சிறந்த ஒப்பாய்வாளர்,மொழிப்பெயர்ப்பாளர்,இலக்கியத் திறனாய்வாளர்.