உஷாதேவியின் கதைகளில் வருபவர்களை நம்மால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பூனையைப் போல் சத்தமில்லாதவர்கள். குயிலைப் போல் தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள். வாசிக்கத் தொடங்கியவுடன் அதில் தெரியும் துயருறும் மனிதர்களை உணரத் தொடங்குவோம். நம் வீடுகளில், வீதிகளில், நண்பர்கள் மத்தியில், உறவினர்களில் என வெளித்தெரியாத மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வோம். பிறகு நம்மால் அவர்களை ஒருபோதும் மறக்க முடியாததுடன், அவர்களின் துயரங்களை நமக்குள் ஏற்றிக்கொண்டு நாமும் அல்லலுறுவோம்.