கௌதம சித்தார்த்தன்
ுத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும். அந்த நுட்பமான கூறுகளுக்குள் இயங்கும் நுண்ணரசியல்களை இனங்கண்டு அவைகளை நெறிபடுத்த வேண்டும். அங்குதான் கலையாக மாற்றம் பெறும் தருணங்கள் தோன்றும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகநாடுகளின் இயக்குனர்களின் சவால்...
கெளதம சித்தார்த்தன்