முகுந்தன் மலையாளாத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதை, கட்டுரை, திரைப்படத்துறை முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவர். பிரெஞ்சு ஆட்சியிலிருந்த கேரளத்தில் பிறாந்தவர். பத்துக்கு மேற்பட்ட நாவல்களும், பத்துச் சிறுகதைட் தொகுதிகளும் படைத்திருக்கும் இவர்
கேரள சாகித்திய அகாதெமியின் தலைவராகப் பணியாற்றியவர். தெய்வத்தின் குறும்புகள், கேசவனின் புலம்பல்கள், ஆதித்தன், ராதா மற்றும் சிலர், டெல்லிக்
கதைகள், பிரவேசம், சீதா, ஒரு தலித்தியப் பெண்ணின் கதை முதலிய நாவல்களை எழுதியவர். கேரள சாகித்திய விருது பெற்ற மையாழிக் கரையினிலே கடந்த
இருபத்தைந்து வருடங்களில் வெளிவந்த மலையாள நாவல்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. வீடு, நதியும் தோணியும், வேசியே, உனக்காக ஒரு கோயில்,
வேசிப்பறவை, திருடனும் போலிசும் முதலிய சிறுகதைத் தொடுதிகளை வழங்கியுள்ளார். தனக்கு தெரிந்தவற்றை - காண்பவற்றை நிழற்படமாகக் கதைகளில்
வடித்துக்காட்டுவதில் தேர்ந்த கதைசொல்லி, மையாழி மக்களின் கதைசொல்லியாகப் புகழ் பெற்ற இவர், நாற்பத்தைந்தாண்டுகளின் இடைவெளியில் எழுதிய
சிறுகதைகளே இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உணர்ச்சி பாவங்களை இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
இதனை டி.சு.சதாசிவம் எளிமையான தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார். மூல மொழியின் ஆன்மா கெடாதவாறு அமைந்த மொழிபெயர்ப்பாக
இந்நூல் திகழ்கிறது.