சோவியத் இனமொழிச் சிறுகதைகள்
சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் பொதுத் தன்மை உடையவை.
’சோவியத் இனமொழிச் சிறுகதைகள்’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதியவர்கள், அதிக பிரபலமல்லாதவர்கள். ஆனபோதிலும், இவர்களது படைப்புகள் புகழ் மிக்க ரஷ்ய எழுத்தாளர்களது படைப்புகளோடு போட்டிபோட்த் தகுந்தவை.
இத்தகு இனமொழிச் சிறுகதையாளர்களின் படைப்புகள் வழியே புதுவை நில அமைப்புகள், கூட்டுப் பண்ணைகள், சமுதாயத் தேவைகளை நிறைவேற்ற மக்கள் குழுவாக இணைந்து செயல்படுதல் என புதிய உலகம் காணக்கிடைக்கிறது.