திருமதி பூமா பொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களின் துணைவியார். இவர் தஞ்சை மாவட்டத்தில் அச்சுத மங்கலம் என்னும் ஊரில் மறைத்திரு விசய கோபாலசாமி உடையார் அவர்களுக்கும், மறைத்திருமதி வி.தாமரை வதனி அம்மாள் அவர்களுக்கும் பிறந்த இளைய மகள். கணிப்பொறி வல்லுநர்கள் பொ.பூங்கோவன், பொ.கோவேந்தன் ஆகியோரின் அன்புத்தாய். மழலைச் செல்வங்கள் பூ.நித்திலா, கோ.யூகி ஆகியோரின் பாட்டி. பொறிஞை பூ.பரணி, மருத்துவர் கோ.சரசுவதி ஆகியோரை மருமகள்களாகப் பெற்ற பெற்றியாள். இவர் B.Sc., (Home Science), M.A. (Sociologist) பட்டங்களைப் பெற்றவர். அமெரிக்கா, பிரான்சு, லண்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, மால்டா, லிபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, மரூசியஸ் ஆகிய நாடுகளைக் கண்டவர். இந்தியா முழுவதும் வலம் வந்தவர். பன்னாட்டு சமையல் கலைகளின் வல்லுநர், மனைமாட்சி மிக்கவர். தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்வின்றி வாழ்பவர்.