ஒவ்வோரு மத்த்தின் நிறுவனரும் தமக்கோ, தமது போதனைகளுக்கோ தெய்வீகம் உண்டெனவே அறிவிப்பர்.
மோசல் தமது , போதனைகளுக்கு தெய்வீகத் தொற்றுவாய் உண்டும், அவை யஹோவா ‘வால் அருள்ப்பட்டது என்பார், இயேசு தாம் கடவுளின் குமாரர் என்றும்,த் தமக்கும் தமது போதனை களுக்கும் தெய்வீகத் தோற்றுவாய் உண்டெண்றும் கூறுவார், கிருஷ்ணன் தாமே கடவுள் என்றும் தமது உரையே கீதை என்றும் அளித்தார்.
புனிதர் புத்தர் தமக்கோ, தமது சாசனங்களுக்கோ தெய்வீகம் எதுவும் இருப்பதாக கூறிக்கொள்ளவில்லை, தாம் மனிதர்களில் ஒருவர் என்றும், மக்களுக்காக தமது போதனை மனிதனுக்கு மனிதன் அளிப்பதே என்றும் கூறுகிறார். தமது போதனை குறைவற்றது என்று அவர் உரிமை கொண்டாடவில்லை. தாம் புரிந்து கொண்டவரையில் விடுதலைக்காக உண்மையான வழி இதுவே என்றார். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது.