புலப்படாத நகரங்கள்
மார்க்கோபோலோ ( 1254 – 1324 ) கான்ஸ்டாண்டி நோயிலிருந்து “கேதே” என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்ற கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “ THE TRAVELS “
சமவெளிகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள், பாலைகள் என்று பயணம் செய்து குப்ளாய்கானின் பேரரசை அடைகின்ற போலோ, கடல் வழியாக திரும்புகின்றார். 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தந்தை நிக்கோலோ போலோவுடனும் பெரியப்பா மேஃபே போலோவுடனும் இப்பயணத்தை மேற்கொண்டார். உலகு தோன்றிய நாள்தொட்டு உலகின் குற்க்காகவும், நெடுக்காகவும் , அந்த அளவுக்கு யாரும் பயணித்த்தில்லை பின் வந்த கொலம்பஸ் இபின்பதூதா போன்றோர்க்கெல்லாம் போலோவின் நூல் வேதாகமமாய் இருந்திருக்கிறது.
இத்தாலியின் பத்திரிகையாளரும் நாவலாசிரியருமான இடாலோ கால்வினோ புதுவகையான கதை சொல்ல்லும் விவரிப்பும் சேர்த்து அற்புதமான நாவலாக “புலப்படாத நகரங்களை” எழுதியிருக்கிறார். விதவிதமான குப்ளாய்கானிடம் விவரிப்பதும் அதனைக் கேட்டுவிட்டு மன்னர் கேள்விகள் கேட்பதுமாக நாவலை உருவாக்கியிருக்கிறார்.