பேசும் சித்திரங்கள்
தமிழில் இதுவரை வந்துள்ள சிறந்த குறும்படங்கள் சிலவற்றை அருண், மிக நுட்பமாகவும், ஆழமாகவும் இப்புத்தகத்தில் அலசியிருக்கிறார். என்னைப் போல் பலருக்கு, நாங்கள் உருவாக்கிய குறும்படங்களைப் பார்த்த பின்பே முழுநீளத் திரைப்பட்த்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். ஆனால் இன்று ஒரு தயாரிப்பாளரை வெறுமனே Impress செய்வதற்கு மட்டும் என பலர் குறும்படங்கள் எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் முழுநீள கமர்ஷியல் திரைப்படங்களின் சுருக்குமான வடிவமாக பல குறும்படங்கள் உள்ளன. அதைப் போன்ற படைப்புகளைத் தாண்டி genuine to its art form ஆக படைக்கப்பட்ட பல குறும்படங்கள், பெரும்பாலும் சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவிட்டு பின் Youtubeல் upload செய்யப்பட்டு பெருங்கூட்ட்த்தில் கண்டுகொள்ளப்படாமல் அதன் ஆயுளை நிறுத்திக்கொள்கிறது. அவ்வாறான படைப்புகளை அலசி ஆராய்ந்து, அதன் online link கொடுக்கப்பட்டு, அந்தந்த படங்களின் இயக்குனரைப் பற்றியும் அந்தக் குறும்படம் எடுக்கப்பட்ட நோக்கத்தையும் கூறியிருப்பது மிகச் சிறப்பு.
----- கார்த்திக் சுப்புராஜ்