முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்களாகவே அவனுடைய கட்டுரைகள் அமைவதாக எனக்குத் தோன்றுகிறது.உயர்ந்த மதிப்பீடுகளை நாடுபவர்களுக்கு உயர்ந்த கலையும் வசப்படும். இக்கட்டுரைகள் எல்லாமே நல்ல மதிப்பீடுகளை நாடிய படைப்பாளிகள் பற்றியவை. தமிழின் இன்றைய இலக்கிய மேன்மைக்கு இவர்களின் பங்கு கணிசமானது.