காதல், வீரம், மர்மம், என யாவும் பின்னிப் பினைக்கப்பட்ட இந்த சரித்திர நாவலின் சிறப்பே எதிர்பாராத திருப்பங்களும் அதன் எளிய நடையுமே ஆகும்
70 ஆண்டுகளுக்கு முன்னால் அமரர் கல்கி அவர்கள் எழுதிய இந்த புதினம் பல்லவ சக்ரவர்த்தி மாமல்ல வர்மர் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ஒன்று சோழ
மன்னன் பார்த்திபன் சோழ நாடு சுதந்திர நாடாக மகோன்னதம் பெற வேண்டும் என்ற தனது லட்சியம் நிறைவேறாமல் போர்க்களத்தில் உயிர் துறக்கிறான்
அவன் கண்ட கனவு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகிறது. அதற்கு இன்றே அடித்தளம் நிறுவப்படுகிறது எப்படி? யாரால்?