பாலஸ்தீன இஸ்ரேல் போர் :
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இரு சாரிடமும் விவாதித்து,பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.