போதும்...மாவீரன் நெப்போலியன் அந்த இக்கட்டான சூழலில் என்ன செய்தார் தெரியுமா...செருப்பு தைக்கும் தொழிளாலியின் மகனாகப் பிறந்து அமெரிக்க அதிபர் ஆனாரே ஆபிரகாம் லிங்கன்...அழுமின் விழுமின் என்றாரே விவேகானந்தர்...அலெக்ஸாண்டரின் வீரம் எப்பேர்ப்பட்டது தெரியுமா... என்பதெல்லாம் போதும்!நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்கென்றே நெப்போலியனும் அலெக்ஸாண்டரும் மற்றும் பல முன்னோர்களும் இத்தனைக் காலம் மூச்சுமுட்ட உழைத்தது போதும்!
இன்றைய ஒன் கிளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துகாட்டுகள் அல்ல.நிகழ்கால முன்மாதிரிகள்.அதற்காகவே இந்தப் புத்தகம்.நவீன உலகில்,முட்டிமோதி,தடுமாறி விழுந்து,அடையாளமின்றித் தொலைந்து,தவறுகளை உணர்ந்து,தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து,வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்த,பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை,அதே உணர்வுடன்,உயிர்ப்புடன்,உத்வேகத்துடன் விவரிக்கிறது - நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்!