நிலவொளி எனும் இரகசிய துணை:
இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என்னும் புதிய பார்வையை இன்னூல் முன்வைக்கிறது. இலக்கியம், மானுடவியல், தத்துவம் எனப் பல துறைகளை எளிதாக இணைத்துக் கவிதை வாசிப்பை வாய்வழியாக மாற்றும் கலையை விளக்குகிறது. இதிளுள்ள கட்டுரைகள் நூலாசிரியரின் நுப்பதாண்டுக் கால இலக்கிய பிரதிகளின் வாசிப்பு, மானிடவியலில் மேற்க்கொள்ளப்பட்ட களப்பணிகள், சடங்குகளிலும் திருவிழாக்களிலும், கலை நிகழ்த்துதளிலும் அவதானிக்கப்பட்ட செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. சுப்ரமணிய பாரதியார் மகாகவியே என முத்துகுமாரசாமி ஜெயமோகனோடு விவாதித்து நிறுவிய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. பின்னவீனத்துவ சிந்தனையாளர்களை 1980களில் தமிழுக்கு அறிமுகபடுத்தி எழுதிய எம்.டி.முத்துக்குமாரசாமி இந்த கட்டுரைகளில் பின்னவீனத்துவத்திலிருந்து நவீனத்துவத்திற்கும் இருத்தலியலுக்கும் தான் திரும்பி வந்ததை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார். வாசகனோடு அந்தரங்கமாக பேசும் தொனி கொண்ட இக்கட்டுரைகள் இலக்கியம், பண்பாடு, த்த்துவம் ஆகிய துறைகளில் அக்கறை கொண்ட அனைவருக்கும் இன்றியமையாத்தாகும்.