நதிகள் இணைப்பு சாத்தியமா?
…. அதெல்லாம் நடக்குற காரியமா என்றால்,’நடக்கும், நடக்க வேண்டும், நடந்தே தீர வேண்டும்’ என்பதை அன்புச் சகோதரர் குன்றில்குமார் மிக அழுத்தந்திருத்தமாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார். ‘நதிகள் இணைப்பு சாத்தியமா?’ இந்த நூலின் தலைப்பில் ? இருந்தாலும் சாத்தியத்திற்கான சகல அம்சங்களையும் புள்ளி விவரங்களுடன் ரொம்பவே அருமையாக விளக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நதிகளின் நீளம், அது எங்கிருந்து உற்பத்தியாகிறது, எவ்வளவு தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது போன்ற தகவல்களைத் திரட்டி தந்திருக்கும் சகோதரர் குன்றில்குமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது.
---- நக்கீரன் கோபால்