நன்றி ஓ ஹென்றி:
எஸ்.சங்கரனாராயண்ன் நூற்றுக்கும் கண்க்கான சிறுகதைகள் எழுதியவர். 75 நூல்களுக்குமேல் எழுதியவர் என்பதைவிட, முக்கியமானது ஒன்று உண்டு, பல இளம் எழுத்தாளர்களை அவர்களின் முதல் சிறுகதைகளிலேயே இனம் கண்டு, எழுதத் தூண்டுகிறவர். பல எழுத்தாளர்களூக்கு இல்லாத இந்தக் குணம்தான் அசாதாரணமானது. இலக்கிய உலகில் அவருக்கு அது ஏற்படுத்தியிருக்கும் இடம், மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பாக்கியம்.
ஒரு நல்ல சிறுகதையின் முதல் வரியே நம்மை புதிய சூழளுக்குப் பழக்கிவிடுகிறது.
தேவகி அக்காவை பொண்ணு பார்க்க வந்தவர்கள் ” வம்சம் என்ற இந்தத் தொகுப்பின் முதல் கதை இப்படிதான் ஆரம்பமாகிறது.
கிளிக்கு மங்களம் நேர்வழி போனால் மூணரை கிலோ மீட்டர். குறுக்கு வழியில் போனால் முந்திப் போய்விடலாம்…
இது இரண்டாவது கதையின் ஆரம்பம்.
ஹென்றியின் கடைசி வரி ஒட்டுமொத்த கதையையும் புரட்டிப் போடுவது போல, நல்ல சிறுகதை எல்லாமே நம்மைச் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் நல்ல ஆரம்பத்தோடுதான் தொடங்குகின்றன. சங்கரனாராயண்ன் கதைகள் எங்கே ஆரம்பிக்க வேண்டுமோ அங்கே ஆரம்பமாகி, எங்கே முடிய வேண்டுமோ அங்கே முடிகின்றன. எழுத்தாளனுக்கு இதைவிட வேறு என்ன கொடுப்பனை வேண்டும்.
தமிழ்மகன்.