நடைவெளிப் பயணம்
எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் இழையோடும் எழுத்து அசோகமித்திரனுடையது. சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் இப்போதும் எழுதிவருகிற முதன்மைப் படைப்பாளி. 59 ஆண்டுகளாக எழுதி வருகிறார். முதலில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர், பிறகு தமிழில் எழுதுகிறார். இவரது பல படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சாகித்ய அகாதெமி’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். எட்டு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள் தமிழுக்கு இவர் அளித்தவை. பதினெட்டாவது அட்சக்கோடு’ , ‘ கரைந்த நிழல்கள்’ , ‘ தண்ணீர் ‘ ஆகிய இவரது மூன்று நாவல்களும் தமிழின் ஆகச்சிறந்த படைப்புகள் வரிசையில் எப்போதும் இடம்பெற்றவை.