என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்
படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி இளைஞரான சங்கரப்பாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பைத் துறந்து நாட்டின் விடுதலைக்கான போராட்டப்பாதையை தனது வாழ்கைப் பாதையாக தேர்வு செய்தார். அன்று முதல் இன்று வரை அப்பழுகற்ற கம்யூனிஸ்டாக , சமரசமற்ற போராளியாக அவரது வாழ்க்கைப் பாதை தோய்வின்றித் தொடர்கிறது. மதுர சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட சங்கரய்யா நாட்டுக்கு விடுதலை கிடைத்த போதுதான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.