பெற்றோர்களின் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறகணிப்பு, கேவலமும் காமமும் சரிபாதியாய்க் கலந்து
பார்க்கப்படும் குரூரப் பார்வை, தீண்டாமைக்கென்றே பிறப்பெடுத்தது போல் பிரயோகிக்கப்படும் அருவெறுப்பு.... இன்னும் எத்தனையோ சொல்லமுடியாத
அம்புகளால் குத்தப்பட்டு நிற்கும் அவலம் அரவாணிகளுடையது.
எந்த்ச் சூரியன் விழிக்கும்? எப்ப்டிப் பொழுது விடியிம்? என்று அரற்ருவதைவிட ஒவ்வொருவர்க்குமான மனிதநேயம் மட்டுமே அவர்களுக்குத் தீர்வு
காணும். அந்த வகையில் தமிழில் ஓர் அரவாணியின் பேனா எழுதிய முதல் நாவல் இது.