·குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட்களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன் மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.
·கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சம அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால் விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளாவு காலை, மாலை இரு வேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.
·துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், ரத்த வாந்தி ஆகியவை குணமாகும்.
·எருக்கன் பூவை காயவைத்துப் பொடியாக்கிகொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் தொழுநோய் குணமாகும்.
·சிறுபீளை, சிறுநெருஞ்சில் செடிகளை வேரோடு பறித்து, பாத்திரத்தில் போட்டு நீருற்றி சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும். தினமும் மூன்றுவேளை பகிர்ந்து அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தினாலே சிறுநீரில் கற்கள் உடைந்து வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
·நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்பது சித்தர்கள் வாக்கு.
No product review yet. Be the first to review this product.