நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய
கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம், தேசத் தலைவர்கள், தியாகிகள், சமூக மனநிலை, மக்களின் பொறுப்புணர்ச்சி, அக்கறை, போற்றத்தக்க
குணாம்சங்கள் என்று சகல திசைகளுக்கும் இட்டுச்செல்கின்றன இக்க்ட்டுரைகள்.
ஒவ்வொன்றும் தனித்த சிறப்பு கொண்டிருந்தாலும் அத்தனையும் மனித மாண்புகளையும் அதன் உன்னதத்தையும் உயிர்ப்பையும் மையமாகக்
கொண்டு சமூகப் பண்பாட்டு அக்கறையை வெளிப்படுத்துபவை.