மானுட யத்தனம் என்றால் என்ன?
முகநூல் போன்ற இணைய வெளியிலிருந்து இன்னும் பரந்த அரசியல் தளங்கள் வரை தமிழ் அறிவுப்புலச் சூழலில் பொதுவெளியை உரையாடல்களாக கட்டமைக்க்க் கோரும் சொல்லாடல் இந்தக் கட்ருரைகளின் ஆகப்பெரும் வலுவென்று நான் நினைக்கிறேன். ‘தனி நபர்களை எக்காலத்திலும் நான் முக்கியமானவர்களாக கருதவில்லை.அவர்களூடே இயங்கும் கருத்துக்களே முக்கியம்’ என்று ராஜன் குறையின் முன்னுரையில் வருகிற வரிகளில் அவரது தத்துவப் பார்வையெனும் சரடின் நுனியைக் காணலாம்.
எதிரிகள் அல்லது மாற்றுகருத்தாளர்கள் என்று கருதப்படுவோர் யாரோடும், எப்பிரச்சினை குறித்தென்றாலும் ‘உரையாடல் பாரம்பரியத்தை இக்கட்டுரைகள் உட்பொருளாக, உட்கிடக்கையாகக் கொண்டிருக்கின்றன.