” தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள் கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத் திடலின் நடுவே திறந்த வெளியில்
கண்ணுக்கு மறைவதுபோல எந்தக் காட்டிலும் மறைய முடியாது” - இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள
குறும்பன். சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திரிமங்களுக்குப் பிறகு அவன் தலைதெறிக்க ஓடித் தப்ப நேர்ந்தது. எனவே அவன்
இந்த விஷயத்தில் அனுபவசாலிதான் ! இந்தக் குறும்புக்காரப் பையனின் கதையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய
காலம் அது. அப்போது உஸ்பெகிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது, சாதாரண மக்கள் பாடு மிகக்
கடினமாக இருந்த காலம் அது.