குழந்தைகளே கலாமைக் கேளுங்கள்
குழ்ந்தைகளால் அன்புடன் மாமா நேரு என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவைத் தவிர்த்து இந்த ஆண்டில் இளஞ்சிறார்கள் அணுகத்தக்கவராக இந்தியாவில் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அவர், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுடன் தொடர்புகொண்டு பேசுவதிலும் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியச் சிந்திப்பதிலும் அவர்களின் பிரச்சினைகளுக்குள் ஊடுருவிப் புகுந்து பார்ப்பதிலும் வாரத்தில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறார். அவருடைய உரைகள், எதிர்காலத்தலைமுறையினருக்கான ஆழ்ந்த பார்வையும் அறிவுறைகளும் கொண்டவையாகும்.அவருடைய அலுவலகத்தைப் பார்வையிட மாணவர்கள் குழு கேட்டுக்கொண்டாலோ அல்லது ஒரு கல்லூரி ஆண்டு விழாவிற்குச் சிறப்புச் செய்வதற்குச் செய்தி அனுப்புமாறு கேட்டுக்கொண்டாலோ அவர் பொதுவாகத் தவிர்ப்பதில்லை. சுடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு அவருக்கு இருந்த விருப்பம் என்னவென்றால், தாம் அரசாங்கத்தில் வகித்துவந்த பொருப்பிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு எளிமையான ஆசிரியராக வேண்டும் என்பதுதான்! இதில் ரகசியம் ஒன்றுமில்லை, ஒரு ராக்கெட் விஞ்ஞானத்தைத் தனிச்சிறப்புத் தொழிலாகக் கொண்டிருந்தவரைப் பொறுத்தவரையில் இது மிகவும் வினோதமானதுதான்.