Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஜெருசலேம் உலகத்தின் வரலாறு

     ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ? உலகின் மையமாகக் கருதப்படுவது ஏன்? இன்று மத்திய கிழக்கின் அமைதிக்கான திறவுகோலானது எப்படி?

     போர்கள், காதல் களியாட்டங்கள், மன்னர்கள், பேரரசிகள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள், துறவிகள், வெற்றியாளர்கள் மற்றும்  விலைமகளிர் ஆகியோரின் வியப்புமிகு செய்திகளின் ஊடே என்றென்றும் மாறிவரும் இந்த நகரின் கதையைப் புதிய ஆவணங்களின் வழியாகத் தனது வாழ்வை அர்ப்பணித்து எழுதியிருக்கிறார் மாண்ட்டிஃபையர்.

     ஜெருசலேமை ஆக்கியவர்களும் அழித்தவர்களும் இந்த மன்னர்களும் வெற்றியாளர்களும் துறவிகளும் தீர்க்கதரிசிகளும்தான்; இவர்களே இந்த நகரின் வரலாற்றைப் பதிவு செய்தவர்கள்; இந்த நகர் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் இவர்களே.

     மன்னர் டேவிட்டிலிருந்து பராக் ஒபாமா வரையிலும், யூத கிறித்துவ இஸ்லாமிய மதங்களின் துவக்கத்திலிருந்து  இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை வரையிலும் பேசுகிறது இந்த நூல்.

     3000 ஆண்டு கால நம்பிக்கைகள், படுகொலைகள், மதவெறி, மத இணக்கம் ஆகிய எல்லாம் நிறைந்த ஒரு காவிய வரலாறு. இப்படித்தான் ஜெருசலேம் தன்னை ஜெருசலேமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. மண்ணிலும் விண்ணிலும் வாழும் ஒரே நகரம் ஜெருசலேம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.