பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட ஆசிரியரை மாணவர்களுக்குப் பிடிப்பதும் அவருடைய வகுப்பு என்றால் தவறாமல் ஆஜராவதும் அவர் இயல்பாகப் பாடம் நடத்தும் முறையால்தான். கணிதப் பாடத்தைக்கூட வெறும் சூத்திரங்களையும் வட்ட. சதுர, முக்கோண படங்களையும் வைத்துச் சொல்லாமல், கதைப்போக்கில் நடத்தக்கூடிய ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதில் ஒரு கருத்து நிலைக்க வேண்டுமானால் அதன் தொடர்பான ஏதாவது மனித உணர்வுடன் கூடிய சம்பவத்தோடு தொடர்புபடுத்திதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
உதாரணங்களுடன் சொல்லப்படும் பாடப் பகுதிகள் போல, கதைகளுடன் சொல்லப்ப்டும் நன்னெறி ஒழுக்கங்கள் விரைவில் அனைவராலும் புரிந்துகொள்ளப்படும் என்றே இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது.