ஈழ இன அழிப்பில் பிரிட்டன்
தனிநாட்டிற்காக போராடிய ஈழத்தமிழ் மக்கள் மீது 30 ஆண்டுகளாக நடைபெற்ற இனப்படுகொலைப்போர் நெடுகிலும் இலங்கை அரசப்படைகளோடு பிரிட்டன் வைத்திருந்த கள்ள கூட்டை அம்பலப்படுத்துவதே இந்த நூலின் நோக்கமாகும். இந்த கள்ள உறவானது பிரிட்டிஷ் கூலிப்படகளின் திரைமறைவு நடவடிக்கைகள், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளின் வெளிப்படையான பயிற்சிகள், நவீன கனரக ஆயுதங்களை வழங்கியமை, பயங்கரவாத தடை சட்டங்களை நிறைவேற்றியமை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திட்டமிட்டு மௌனம் சாதித்தது என பல வடிவங்களை கொண்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரிட்டிஷ் அலுவலர்கள் ஈழ விடுதலைப்போரில் முடிவெடுக்கும் வாய்ப்புடன் இருந்தார்கள். அவர்கள் முடிவெடுத்தார்கள் வேறுவிதமாக. அவ்வாறான முடிவுகளின் ஒட்டுமொத்த விளைவால்தான் 2009-இல், முள்ளிவாய்க்கால் கடற்கறைகளில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொலை செய்யப்படுவதில் போய் முடிந்ததென்பதை வெளிப்படையாக காண நேர்ந்தோம்.