எரியும் எண்ணெய் தேசங்கள் :
2011-ம் ஆண்டு மத்தியக் கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் சேர்த்து 19 நாடுகளில் திடீரென்று ஆரம்பமான மக்கள் எழுச்சி, புரட்சியாகப் பரிமாணம் அடைந்து சில ஆட்சி மாற்றங்களையும் நிறைய இழப்புகளையும் ஏற்படுத்தியது.
இன்றைக்கு சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தம் என்பது மேற்படி 2011 புரட்சிகள் நாக்கில் விட்ட சொட்டுத் தேன்தான். எல்லா நாடுகளிலும் புரட்சி. ஆனால் எங்கும் அமைதியில்லை, நிம்மதி இல்லை, மக்களின் எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. ஏன்? ஆராய்கிறது இந்த நூல்.