“ எல்லா உயிருக்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”
என்பது தொல்காப்பியம் தரும் செய்தி, மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் உஇன்பம் நோக்கியே நகர்கின்றன. ஆனால், மனித இனம்
மட்டும் இன்பத்தை விரும்பி, எல்லா வகையிலும் துன்பம் தரும் செயல்களிலேயே ஈடுபட்டு நிற்கிறது இதற்கு அடிப்படைக் காரணம் அறத்துக்குப் புறம்பான ஆசை:
வாழ்க்கை குறித்த தெளிவான புரிதலின்மை: நிலையற்ற பொருட்களிடம் நீங்காத பற்று.
எப்பொதும் கானம் பாடும் ஒரு பறவையைப்போல், ஆனந்தக் கூத்தாடும் அலையைப்போல், துள்ளி குதித்தோடும் நதியைப்போல் நாமும்
இருக்கவேண்டும் என்ற இறையன்புவின் இதயட்விருப்பத்தில் விளைந்ததுதான் “ எப்பொதும் இன்புற்றிருக்க...” என்னும் இந்த இனிய படைப்பு, இறையன்புவின்
பேனா என்றூம் பிரசவிப்பது பொய் வேடம் புனையாத எழுத்து: போலித்தனத்தின் முகமூடிகளைக் கிழித்தெரியும் தார்மிக ஆவேசம் கொண்ட கருத்து.