எனது வாழ்வும் போராட்டமும்
பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரது துணிவின் காரணமாகவும் அகிம்சை மீதான அர்ப்பணிப்பு காரணமாகவும் இந்தியா மக்கள் அன்போடு அவருக்கு எல்லை காந்தி பெயர் இட்டனர். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குக் கான் இன்னும் நம்மோடு இருக்கிறார்கள். அப்துல் கபார் கான் முக்கியப் பங்காற்றியவர் என்பது அவர்கள் அறிவர். ஆனால் புதிய தலைமுறையினருக்கு அவர் எங்கோ தொலைவில் இருக்கின்ற வரலாற்றுப் புள்ளியாக அதிகம் கவனிக்கப்படாதவராகத் தெரிகிறார். இம் மனிதரின் சிறப்பியல்புகளை அவர்கள் அறிய நேரிட்டால் அந்த மின்னும் ஒளிவிளக்கின் கீற்றுகள் அவர்கள் மீது விழுமேயானால், அவர்கள் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்வர்.
இந்நூலின் எந்த நேரத்தில் வந்தாலும் அது ஒரு முக்கியமான நிகழ்வாகவே இருக்கும். அதிலும் இப்போது இந்நூல் வெளிவருவது இன்னும் குறிப்பிட்த்தக்கதாக இருக்கிறது. கான் அப்துல் கபார்கானின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் தலைவராக இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது காந்தி நூற்றாண்டு விழாவின் போது பாத்ஷாகானை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதே அக்குழுவின் முக்கிய நோக்கம். பாத்ஷா கான் நமது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை அறிந்து மக்கள் மகிழ்வடைவர்.