”உலகெல்லாம் கடவுள் மயம் என்னும் உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது.மாயை பொய்யில்லை.பொய் தோன்றாது.மாறுவது மாயையின் இயற்கை,எனவே மாறுகிறது.இது கடவுள் திருமேனி இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன.நன்மைகள் செய்வதற்கும்,எய்வதற்கும் உரியன.சரணாகதியால் கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள்.எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.அதனால் விடுதலை அடைவீர்கள்.சத்ய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள்.இல்லறத் தூய்மையால் இறைத்தன்மை அடைவீர்கள்.
இந்த மகத்தான உண்மையையே பகவத்கீதை உபதேசிக்கிறது.”
இதுவே மகாகவி பாரதியார் எழுதிய முன்னுரை.