புலியூர் முருகேசனின் கதைகள் புனைவு தளத்திற்கு அப்பால் வாசகனைக் கடத்திச்சென்று மனம் எதிர்கொள்ள மறுக்கும் பல பிரச்சனைகளின் மேல்
கவனம் குவிக்க வைக்கின்றன.தன்னைச் சூழ்ந்திருக்கிற யாவற்றையும் அவர் அரசியலுடன் நோக்குகிறார். இந்தச் சமூகத்தின் மீது அவருக்கு இருக்கிற
தார்மீக கோபம் கோஷங்களாகவோ வெற்றுப் புலம்பல்களாகவோ உருவெடுக்காமல் கலையாகப் பரிணமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கரூரிலிருந்து நவீன படைப்பு மொழியோடு இதுவரை எவரும் எழுந்து வரவில்லையே என்கிற ஏக்கத்தை உடைக்கிறார் புலியூர் முருகேசன்.கட்டுரைத்
தனமற்ற, அரசியலும் இலக்கியமும் பின்னிப்பிணைந்த, நகையாடல்கள் பரவலாக... புதிய எழுத்துக்களாக முகங் காட்டுகிறது இவருடைய எழுத்தில்...