பிருந்தாஜினி சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் வரும் கதை மாந்தர்களில் பெரும்பான்மையினர் நடுத்தர வர்க்கத்தினராகவோ அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழ்நிலையில் உள்ளவர்களாகவோ அமைகின்றனர். எனினும், விதிவிலக்காக ‘பரஞ்சோதி’ என்னும் கதை மட்டும் இறைத்தொண்டருக்கும் இறைவனுக்கும் ஏற்பட்ட இக்கட்டை படம்பிடித்துக்காட்டுகிறது. இக்கதை முடிவில் இக்கால சமூகத்தில் நிலவும் அவ நம்பிக்கையை கோடிட்டுக்காட்ட செந்தமிழினியன் தவறவில்லை. அதாவது ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற போதிலும் ‘அதுவின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற எதார்த்த நிலையை நினைவூட்டுகிறது இக்கதை.
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் பிரஞ்சுப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர்
No product review yet. Be the first to review this product.