Dr.S.முருகுசுந்தரம், தோல் மருத்துவராக 25ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தோல், முடி நகங்களுக்கான உலகின் முதல் சிறப்பு தனி மருத்துவமனையான சென்னை தோல் மருத்துவ மையம் மற்றும் யேசுடியான் ஆய்வு நிலையத்தின் நிறுவன இயக்குநர். குறள் மேல் தீராக் காதலும், தன் குருநாதர் பேட்ரிக் யேசுடியான் அவர்கள் மேல் பக்தியும் கொண்டு வாழ்பவர்.
இடையறாத மருத்துவப் பணிகளோடு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதும் தமிழ் ஆர்வலர். ‘இளைஞர்களுக்கு இன்றியமையாத இருபத்தைந்து குறட்பாக்கள்’ என்ற நூலின் ஆசிரியர். ‘டாக்டர் வள்ளுவர்’ இவரது இரண்டாம் நூல்.
ஒவ்வொரு சிறு கட்டுரையிலும், முருகு வள்ளுவர் மீது உருகும் அன்பில் ஊற்றெடுக்கும் வியப்பில் வார்த்தெடுத்துள்ள வண்ணம் மிகு வரிகள் திருவள்ளுவமாலைக்கு அருகில் நிற்கும் தரமும், தகுதியும் படைத்தவை என்று யாருக்கும் பாராட்டத்தோன்றும்.
- ஈரோடு தமிழன்பன்
இதில் வள்ளுவனை வியப்பதா?, மருத்துவர் முருகுவின் குறளின் மருத்துவப்பார்வையை வியப்பதா?
‘டாக்டர் வள்ளுவர்’ மருத்துவர் முருகுசுந்தரத்தின் மிக முக்கியமான சமகாலப் பார்வை.
- மரு. கு.சிவராமன்
No product review yet. Be the first to review this product.