ஒரு கலைஞன் என்பவன் சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண் மக்களைவிடவும் நலிந்துகிடப்பவன். மாறாத சமூகத்தில் பெண்ணைவிடப் பரிதாபத்துக்குரிய ஜந்து கிடையாது. மாறிய சமூகத்தில் அவளைவிட மாபெரும் சக்தியும் இல்லை என்கிற அனுபவம் இந்த நூற்றாண்டில் மனித ஜாதிக்கு வந்திருக்கிறது. அதனால்தான் எழுதுகிறவன் கலைஞர்களில் சிறப்பானவன் என்று நான் கண்டுகொண்டேன். பிகாஸோவின் ஓவியங்களை விடவும் பீதோவனின் இசைக் கோலங்களை விடவும் - ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல் உலக மக்களை எல்லாம் ஆட்டிப் படைத்துவிடும். இசை, கேட்டாரை மட்டும் பிணிக்கும். இலக்கியம் கேளாதாரும் வேட்பு காலகாலத்துக்கும் நிலைக்கும்.
- ஜெயகாந்தன்
No product review yet. Be the first to review this product.