இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனைக் கவிதையிலும் இசை லயமான இதயத் துடிப்பைக் கேட்க முடிகிறது. அன்பையும் காதலையும் ஏனைய உறவுகளையும் தன் கவிதைகளில் விதவிதமாய்க் கொண்டாடுகிறார் கவிஞர்.
- ஆரூர் தமிழ்நாடன்
கவிஞனுக்கு மட்டும் தான் மலைகளுக்குள் சிலைகளைக் காணவியலும். சிறு துளியில் ஒரு கடலை தரிசிக்க முடியும். ?ஒரு கூழாங்கல்லில் நதியின் வலியை உணரத் தெரியும். ?ஒரே ஒரு நட்சத்திரத்தில் வானத்தின் வரலாறை விளங்கிக் கொள்ள இயலும். புனிதஜோதி அப்படித்தான்.
- கவிஞர். தங்கம் மூர்த்தி
ஏற்கனவே உரைக்கப்பட்டதையும், ஒன்றேபோல் உரைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் கடந்து வேறுபட்டு, புதியனவற்றைப் படைத்தளிக்கின்ற நல்லியல்பைத் தன்னியல்பாகப் பெற்றிருப்பவர்.
- ஜெயபாஸ்கரன்
கவிஞர் திருமதி புனித ஜோதி அவர்களின் நிழல்களின் இதயம் என்ற இந்நூல் சமூக நிஜங்களின் நிழல்கள் விழுந்திருக்கும் அவரது இதயத்தை வெளிப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். இதில் நாம் இருக்கிறோம் நமது சமூகம் இருக்கிறது சமூகத்தின் மீதான அவரது கரிசனம் இருக்கிறது. இவை திருமதி புனித ஜோதி அவர்களை கவிஞராக அல்ல மிகச்சிறந்த கவிஞராக காட்டுகிறது.
- ஏர்வாடி எஸ்.இராதகிருஷ்ணன்