ஜப்பானியத் தேவதைக் கதைகள்
ஜப்பானிய தேவதைக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதும் போது உள்ளூர் வாசனையைக் கொண்டுவருவதற்காக அல்லது கதைத்தேவைக்கான விவரிப்புகளுக்காக அல்லது எனக்கு விருப்பமாக இருந்ததால் எனது கற்பனையையும் சேர்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்வுகளை வேறு படைப்புகளிலிருந்து பெற்று மாற்றியமைத்திருக்கிறேன். என் நண்பர்களில் வயதானவர், இளைஞர், அமெரிக்கர், ஆங்கிலேயர் எவராயிருந்தாலும் சிலர் ஜாப்பானிய மொழியின் அழகிய மரபு மற்றும் புராணக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் எப்போதுமே மிகுந்த ஆவலுடன் கேட்பதைக் கண்டுருக்கிறேன்.