கடந்த நூற்றாண்டின் பிற்கூற்றில் உலகின் எல்லா மூலைகளிலும் சிதறுண்ட ஈழத்துப் படைப்பாளிகள் புலம்பெயர் இலக்கியம் தமிழுக்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என நிறுவினர். இக்காலப் பகுதியில் 'ஓசை' எனும் இலக்கியக் காலாண்டிதழை முதலிலும், 'அம்மா' எனும் சிறுகதைக்கான காலாண்டிதழை அதன்பின்னான காலங்களிலும் நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டவர் மனோ. இவையிரண்டும் புலம்பெயர் இலக்கிய இதழ்களில் மிக முக்கியமானவை. இலக்கிய ரசனையோடு அச்சுக்கலை, நூல் வடிவமைப்பு என்பன வாழ்வாகவும் அமைந்ததில் மனோவிற்கு இது இலகுவில் சாத்தியமாயிற்று.
எப்போதோ பரந்த வாசகர்களின் கைக்கு வந்திருக்க வேண்டிய மனோவின் படைப்புகளின் தொகுதி, 'கொரோனா வீட்டுக் கதைகள்' இப்போதாவது வருகிறதே என மகிழ்கிறேன். வாசகர்களின் மனதிலும் அதே மகிழ்வு ஏற்படும் என நம்புகிறேன்.
-இளவாலை விஜயேந்திரன்.
No product review yet. Be the first to review this product.