தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ஆகிவிட்டதை! சாலைகளின் உளவியலைப் பதிவு செய்த உலகின் முதல் கவிஞனாக கவிமுகில்தான் இருக்கக்கூடும். “மொத ஆட்டம்” என்றொரு கவிதை, டூரிங் கொட்டகைகளுக்கு மாலை 7 மணி காட்சிக்குச் செல்வதை அருமையான கவிதையாகப் புனைந்திருக்கிறார் கவிஞர் கவிமுகில்.
“கல்பொரு சிறுநுரை” உங்களின் நெஞ்ச மேடுகளில் தொடர்ந்து முட்டி மோதும்! அவை உருவாக்குகிற நுரைகள் படர்ந்து பெருகி, உங்களை வான் மேகங்களுக்கிடையே கடத்திச் செல்லும் ஆற்றலுடையவை!
No product review yet. Be the first to review this product.