/files/7a2e159b-79c1-493b-8977-eb0f06df047b-06-12-2020,13:06:34_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அமெரிக்க மக்கள் வரலாறு

(0)
Price: 900.00

In Stock

Book Type
வரலாறு
Publisher Year
2020
Number Of Pages
850
Weight
1500.00 gms
ஜெ. சாண்டர்ஸ் ரெட்டிங், ஒரு கறுப்பின அமெரிக்க எழுத்தாளர். 1619 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவுக்கு ஒரு கப்பலின் வரவை அவர் இவ்வாறு வர்ணிக்கிறார்:
"வட்ட கொடிமரத்தில் கொடி பறந்தபடி, தண்ணீரை கிழித்தபடி, கடற்பேரலையில் கப்பல் மிதந்து வந்தது. அது ஒரு புதுமையான கப்பல், அனைத்து வகையிலும் உண்மையாகவே புதுமையானதாக இருந்தது. அது ஒரு புதிரான, அச்சுறுத்தும் கப்பல். அந்த கப்பல் தனியாருடையதா! வர்த்தகக் கப்பலா! அல்லது சண்டை கப்பலா! என்று எவருக்கும் தெரியாது. அதன் பக்கவாட்டில் பீரங்கிகள் தம் கருத்த-வாயை பிளந்திருந்தன. கப்பலில் பறந்த கொடி, டச்சுக் கொடி; அதன் பணியாளர்கள் பல்வேறுபட்டவர்களாக இருந்தனர். அது வந்தடைந்த இடம் வர்ஜீனியா காலனியின் ஒரு ஆங்கிலேய குடியேற்ற பகுதியான ஜேம்ஸ் டவுன் துறைமுகம். அந்த கப்பல் வந்தது. வியாபாரம் செய்தது. சிறிது நாட்களுக்குப்பின் திரும்பிச் சென்றது. நவீன வரலாற்றில் வேறெந்த கப்பலும் இவ்வாறான வியப்பிற்குரிய சரக்கைக் கொண்டு வந்திருக்காது. அதில் கொண்டுவரப்பட்ட சரக்கு என்ன? இருபது அடிமைகள்."

கறுப்பின அடிமைகளை அமெரிக்காவுக்கு கடத்தியதைப் பற்றி நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பயங்கரமாக இருந்தது. அது கறுப்பின பெண்கள் விஷயத்தில் பன்மடங்கு அதிகமாக இருந்தது. கடத்தப்பட்ட அடிமைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருந்தனர். ஒரு அடிமை வர்த்தகர் கூறுவது:

கர்பிணி பெண்கள் பெட்டிகளில் சங்கிலிகளில் பூட்டியிருந்தபடியே பிரசவித்ததை நான் பார்த்தேன். குடிகார மேற்பார்வையாளர்கள் அவர்களை விடுவிக்கவில்லை... மனித சரக்குகள், மூட்டைகளாக அடுக்கப்பட்டிருந்தபடியே, கொதிக்கும் வியர்வையில், குழந்தைகளை பிரசவித்தனர்... கப்பலின் மேல்தளத்தில் ஒரு இளம் நீக்ரோ பெண் சங்கிலிகளில் பூட்டப்பட்டிருந்தார். அவள், விலைக்கு வாங்கப்பட்டு, கப்பலில் ஏற்றியவுடனே மனம் பேதலித்தவளானாள்.

‘லிண்டா பிரென்ட்’ அடிமைத்தனத்திலிருந்து தப்பித்த மற்றொரு பெண் தனது துயரத்தைக் கூறுகிறார்:

ஆனால் அப்போது நான் எனது பதினைந்தாவது வயதை அடைந்தேன். அது ஒரு அடிமைப் பெண்ணின் வாழ்க்கையில் துயரமான பருவம். எனது எஜமான் என் காதுகளில் கெட்ட வார்த்தைகளை கிசு கிசிக்கத் தொடங்கினான். என் இளமையும், அவற்றின் தாக்கத்தையும் என்னால் புறக்கணிக்க முடியவில்லை... ஒவ்வொரு திருப்பத்திலும் என் எஜமான் எதிர்ப்பட்டான். ஒவ்வொரு சந்திப்பிலும் நான் அவனுடைய உடமை என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தான். பூமியின் மீது, சொர்க்கத்தின் மீது ஆணையிட்டு, அவனுடன் என்னை படுக்க வற்புறுத்தி பணிய வைப்பேன் என்றான். நாளெல்லாம் முதுகொடிய உழைத்து, நல்ல காற்று சுவாசிக்க வெளியே சென்றால், அவனுடைய கால்கள் என்னை நாயாட்டம் தேடி வரும். எனது தாயை புதைத்த இடத்தில் நான்
மண்டியிட்டால், அங்கும் அவனுடைய கருநிழல் என்னை ஆக்கிரமிக்க என்மீது விழும். எனக்கு இயற்கை வழங்கிய இளகிய மனம், அது துன்பம் நிறைந்து பெரும் பாரமாகி விட்டது...
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.