ஜேம்ஸ் பெட்ராஸ் அமெரிக்காவில் பிறந்து-வளர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சமூகவியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர்.பாஸ்டனை சார்ந்த பெட்ராஸ்,பர்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.நியூயார்க்கின் பிங்ஹாப்டன் பல்கலைக்கழகத்திலும்சமூகவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர்.வளர்ச்சி ஆய்வுகள்,லத்தின் அமெரிக்க,கரீபியன்,மேற்காசிய நாடுகளின் விவகாரங்கள்,புரட்சிகர இயக்கங்கள்,வர்க்கப் பகுப்பாய்வுகள்,ஏகாதிபத்தியம்,உலகமயமாக்கல்,பண்பாடு போன்ற அம்சங்களில் தேர்ச்சி பெற்றவர்.வயது 70க்கு மேல் என்றாலும் இப்போதும் தொடர்ந்து எழுதுகிறார்.லத்தீன் அமெரிக்க நாடுகளை சுற்றுகிறார்.அங்குள்ள மக்கள் இயக்கங்களுக்கு உதவி வருகிறார்.பெட்ராஸ் தன்னை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி ஊழியராக,எழுத்தாளராக அறிவிக்கிறார்.