சாதி மத மோதல்களால் மானுடம் காயப்பட்டுக் கிடக்கும் இன்றைய சூழலில் வேலு நாச்சியாரின் கதையில் இதற்கொரு மருந்து இருப்பதாக எனக்கு தோன்றியது.
வேலு நாச்சியாரின் கதை என்பது உடையாளின் கதை. குயிலியின் கதை. சாதி உணர்வுகளால் கறைபடாத மானுடப் பூக்களின் கதை.
வேலு, உடையாள், குயிலி என்னும் முப்பெரும் தேவியார் என்னுள் ஏற்படுத்திய சமூகச் சிந்தனைகளே, என்னை எழுது, எழுது என்று நிர்ப்பந்தித்தன.
கே. ஜீவபாரதி.