ஒவ்வொரு பூஜைக்கும்,விரதத்திற்கும் தனி மகிமை உண்டு.எந்தப் பிரச்சனைகளுக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும்,என்ன விரதத்தை கடைபிடித்தால் விரும்பியது நிறைவேறும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் பூஜைகள்,விரதங்கள்,அவற்றை பற்றிய புராண சாஸ்திர விளக்கம்,விரதமுறைகள் மற்றும் விரதபலன்கள்,காயத்ரி மந்திரம் ஆகியவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் “வாழ்வை வளமாக்கும் பூஜை-விரதமுறைகள்” என்ற தலைப்பில் செந்தூர் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார்.
இந்தநூல் எழுத சிவாச்சாரியார்கள்,ஓலைச்சுவடிகள் மற்றும் சில பட்டாச்சாரியர்கள் நேர்காணல்,களப்பணிகள் மேற்கொண்டும் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
“வாழ்வை வளமாக்கும் பூஜை-விரதமுறைகள்” நூலை படித்து விட்டு,வேலூர் பொற்கோவில் நிறுவனர் அருட்திரு சக்தி அம்மா, “விரதங்கள் குறித்து பல உண்மைகளையும்,புராண சாஸ்திர விளக்கங்களையும்,விரதத்தின் முறைகளையும் மற்றும் விரதத்தின் பலன்களையும்,பூஜைகள் பற்றியும் முழுமையான தகவல்களுடன் ‘பூஜை-விரத அகராதி’ போல் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது.இந்நூல் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞான பொக்கிஷம் ஆகும்”என்று குறிப்பிட்டுள்ளார்.