வடமொழி இலக்கிய வரலாறு
பேராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் ஈழத்து சமஸ்கிருத சிந்தனை மரபின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமஸ்கிருதப் பேராசியராகப் பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராக்க் கௌரவிக்கப்பட்டவர். வடமொழி இலக்கிய வரலாறு, சைவத் திருக்கோவிலற் கிரியை நெறி ஆகிய நூல்கள் இவரது சமஸ்கிருத, இந்துப் பண்பாடு குறித்த ஆழ்ந்த ஞானத்திற்குச் சான்றுகளாக அமைவன. ‘வடமொழி இலக்கிய வரலாறு‘ வடமொழி அறிவு இல்லாத எவருமே இலகுவில் புரிந்துகொள்ளத்தக்க இனிய நடையில் ஆக்கப்பட்டிருப்பது குறித்து வடமொழிப் பண்டிதர்களும், தமிழ் இலக்கியவாணர்களும் ஏகோபித்தப் பாராட்டினைத் தெரிவித்துள்ளனர். உள்ளத்தினிலே ஒளியிருந்த்தனால், வாக்கினிலே ஒளியுண்டான சிறப்பு அது.