உயில் மற்றும் பிற
கணவன் இருக்கும்போது சுகமில்லாமலும், சொற்ப வருடங்களில் கணவனை இழந்தும், புகுந்த வீட்டிலும் சமூகத்திலும் ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவளின் வெற்றியை "உயில்' கதை சொல்கிறது.
பொதுவாக, நூலாசிரியர் என்பவர் ஒரு நாளைக்கு 50 பக்கங்கள் எழுத முடியும்; நாடகாசிரியர் நாள் முழுதும் சக நடிகர்களுடன் ஒத்திகை செய்ய முடியும்; ஆனால், கவிஞர் ஒரு நாள் முழுக்க கவிதை எழுத முடியாது என்பதையும், ஒருவர் இறந்தபின் அவருடைய ஆவி, தன் கடைசிகால ஆசைகளை நிறைவேற்றுகிறார்களா என்று பார்ப்பதையும் பிம்பமாக பதிவு செய்திருக்கும் வரிகள் நம்மை அதுபோல ஆசைப்பட வைக்கிறது.
தற்கொலையின் விளிம்பிற்கு சென்ற ஒரு பெண், நூல் வாசிப்பதன் மூலம் எப்படி புது வாழ்வு பெற முடியும் என வழிகாட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
கதைகளுக்கு தந்திருக்கக் கூடிய தலைப்புகள் அனைத்தும் நச்சென்று அமைந்திருக்கின்றன. கற்பனை, மாயம், யதார்த்தம் கலந்து சுய உணர்வுடன் எழுதுவதில் நூலாசிரியருக்கென்று தனியிடமுண்டு என்பதை இத்தொகுப்பிலுள்ள கதைகள் நிரூபிக்கின்றன.