''இன்றைய மனித உறவுகள் நொறுங்கிக்கிடப்பதைக் காணமுடிகிறது. முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்களையே காணமுடிகிறது. அந்த முகத்திலும் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொன்னை இழப்போமோ, பொருளை இழப்போமோ! என்ற அச்ச உணர்வின் தடிப்புகளும் வெடிப்புகளும் கோலம் போட்டிருப்பதைக் காணமுடியும். முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்கள் தங்கள் முக மூடியைக் கழற்றி எறிய வேண்டும். மனித உறவுகளின் மேன்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.
நேர்மையாக நண்பர்களையும் நேசிக்க முடியவில்லை. உறவினர்களையும் நேசிக்க முடியவில்லை. அக்கம் பக்கத் தாரையும் நேசிக்க முடியவில்லை என்ற அவல நிலை பரவுயுள்ளநுழ பிறரை நேசிக்கத் தெரியாத மனிதர்களுக்கு தன்னையும் நேசிக்கத் தெரியாமல் போய்விடுகிறது; தன் மீதே வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பிறரை வெறுப்பதையே கற்றுக் கொண்டவர்களாக நடமாடிக் கொண்டிருப்பார்கள்.